'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம்! | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' | வேட்டையன் படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரா? |
சென்னை : 'தவறான நோக்கத்தில் அத்துமீற நினைப்பவர்களை செருப்பால் அடியுங்கள்' என, நடிகர் விஷால் கூறியுள்ளார். அதற்கு பதிலடி தரும் வகையில், 'என்னிடம் நிறைய செருப்பு உள்ளது; உங்களுக்கு வேண்டுமா?' என, நடிகை ஸ்ரீரெட்டி கேட்டுள்ளது, கேரளாவை போல, தமிழ் சினிமாவையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
நடிகர் விஷால் நேற்று தன், 47வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று உணவு வழங்கினார். பின் அவரிடம், 'கேரள சினிமாவில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை போல, தமிழ் சினிமாவிலும் உள்ளதா?' என்று, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு விஷால் கூறியதாவது: தமிழ் சினிமாவில், சில டுபாக்கூர் கம்பெனி நடத்துபவர்களால், நடிக்க வாய்ப்பு தேடி வரும், 80 சதவீத பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். நிறுவனங்கள் குறித்து ஆராய்ந்து, அங்கு வாய்ப்பு தேடி செல்ல வேண்டும். வாய்ப்பு தேடி வரும் பெண்களை, நடிகையரை, அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய யார் அழைத்தாலும், செருப்பால் அடியுங்கள் என்றார். மேலும் என் மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால், அவர் செய்த சேட்டைகள் எல்லாம் எனக்கு தெரியும் என தெரிவித்தார்.
விஷால் கருத்து குறித்து, எக்ஸ் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது: நீங்கள் ஒரு பெண்ணை பற்றி பேசும் போது, உங்கள் நாக்கு ஊடகங்களுக்கு முன், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிரச்னைகளை உருவாக்கும் விதம் அனைவருக்கும் தெரியும். நீங்கள் ஏற்கனவே பல முறை நிரூபித்துள்ளீர்கள். செய்த கர்மா ஏற்கனவே உங்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. என்னிடம் நிறைய செருப்பு சேகரிப்புகள் உள்ளன. உங்களுக்கு ஒன்று வேண்டுமா என, தெரியப்படுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.