தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒரு சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்தவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் தனக்கு வாய்ப்பு தர மறுப்பதாக கூறி நடிகர் சங்கம் முன்பு அரைநிர்வாண போராட்டம் நடத்தியன் மூலம் பரபரப்பானவர். தற்போது சென்னையில் செட்டிலாகி இருக்கும் அவர் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அவரது வாழ்க்கை கதை சினிமாவாகிறது. படத்துக்கு ரெட்டி டயரி என்று பெயர் வைத்துள்ளனர். திரைப்படக் கல்லூரி மாணவர் ராஜாங்கம் என்பவர் இயக்குகிறார். ரவிதேவன் என்பவர் தயாரிக்கிறார். இந்த நிலையில் படத்தை தயாரிக்க கூடாது, வெளியிடக்கூடாது என்று தனக்கு மிரட்டல் வருவதாக தயாரிப்பாளர் ரவிதேவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ரெட்டி டைரி படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று போனில் எங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். படத்தில் உண்மை சம்பவங்கள் அப்படியே இடம் பெறுவதே இதற்கு காணரம். சினிமா வாய்ப்பு தேடும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கொடுமைகளை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வழியாக படம் சொல்வதே இந்த மிரட்டலுக்கு காரணம். என்றார்.