மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணையும் ராஷ்மிகா | டான் 3ம் பாகத்தில் இணைந்த கிர்த்தி சனோன்! | தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்! | பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா! | அக்., 31ல் ஒரே பாகமாக வெளியாகும் ‛பாகுபலி : தி எபிக்' | 'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் |
எடிட்டர் லெனின் கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ள படம் கட்டில். இ.வி.கணேஷ் பாபு இயக்கி, நடித்துள்ளார். அவருடன் சிருஷ்டி டாங்கே, கீதா கைலாசம், கன்னிகா, ஓவியர் ஷ்யாம், சம்பத்ராம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். பல தலைமுறைகளாக கடந்து வரும் ஒரு கட்டிலை பற்றிய கதை. இந்த படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது: இந்த படம் வணிக நோக்கத்திற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. நமது பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்கு சொல்வதற்காகவும் உருவாகி உள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்கள் மூலம் படத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இருக்கிறோம். இதற்காக படத்தை ஆங்கிலத்திலும் உருவாக்கி உள்ளோம். முதல் அங்கீகாரமாக புனே திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
வருகிற 12ந் தேதி புனேயிலும், 16ந் தேதி மும்பையிலும், அதன்பிறகு நாக்பூர், படவிழாக்களிலும் திரையிடப்படுகிறது. தியேட்டர் பிரச்சினைகள் முடிந்ததும் திரையரங்குகளிலும் வெளியிட இருக்கிறோம். என்றார்.