2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது |
மலையாள திரையுலகில் பத்து வருடங்களுக்கு மேல் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் லிஸ்டின் ஸ்டீபன். தமிழில் 'சென்னையில் ஒரு நாள்', தனுஷ் நடித்த 'மாரி', கீர்த்தி சுரேஷ் அறிமுகமான 'இது என்ன மாயம்' உள்ளிட்ட படங்களையும் இவர் தயாரித்துள்ளார். கடந்த சில வருடங்களாக மலையாளத்தில் மட்டுமே படங்களை தயாரித்து வரும் இவர். சமீபத்தில் திலீப் நடிப்பில் வெளியான 'பிரின்ஸ் அண்ட் பேமிலி' என்கிற படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு மலையாள திரையுலகை சேர்ந்த இளம் நடிகர் ஒருவரை பற்றி பெயரைக் குறிப்பிடாமல் விமர்சிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சியில் பேசினார் லிஸ்டின் ஸ்டீபன். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.. அதனை தொடர்ந்து சிலர் இவர் நடிகர் நிவின்பாலியை தான் குறிப்பிட்டு பேசினார் என்றும் தற்போது நிவின்பாலி நடிக்கும் படத்தை இவர் தயாரித்து வருவதால் இருவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அதன் படப்பிடிப்பு கூட பல நாட்கள் நின்று இருந்தது என்றும் காரணம் கூறினார்கள். ஆனால் நடிகர் நிவின் பாலி சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிரின்ஸ் அண்ட் பேமிலி புரமோசன் நிகழ்ச்சியில் அந்த படத்தில் திலீப்பின் தம்பியாக இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் தியான் சீனிவாசன், லிஸ்டின் ஸ்டீபன் சொன்ன நடிகர் நிவின்பாலி அல்ல அவர் என்னைப் பற்றித்தான் கூறினார்.. அது மட்டுமல்ல அப்படி கூறியது கூட இந்த படத்தை ரசிகர்களிடம் பரபரப்பாக பப்ளிசிட்டி பண்ணுவதற்காக தான். இதெல்லாம் ஒரு விளம்பர யுக்தி” என்று கூறி ரகசியத்தை உடைத்தார். இந்த நிகழ்ச்சியில் லிஸ்டின் ஸ்டீபனும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் இருந்தாலும் பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாமா செய்வார்கள்?