சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாளத்தில் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இதுவரை உலக அளவில் 200 கோடி வசூலித்துள்ளது. இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மோகன்லால் மற்றும் ஷோபனா இவர்கள் தவிர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பலர் ரசிகர்களால் கவனிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மோசமான போலீஸ் அதிகாரிகளாக நடித்த சீனியர் வில்லன் பினு பப்பு மற்றும் இந்த படத்தில் தான் அறிமுகமாகியுள்ள பிரகாஷ் வர்மா ஆகியோரும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
அது மட்டுமல்ல சில காட்சிகளில் வந்தாலும் இந்த கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரமாக, வில்லன் பிரகாஷ் வர்மாவின் மகளாக நடித்திருந்த ஆர்ஷா பைஜூ என்பவரும் தற்போது ரசிகர்களிடம் வெளிச்சம் பெற்றுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இவர் மோகன்லால் உடன் இணைந்து நடித்திருந்தார்.
மோகன்லாலுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் கூறும்போது, “மோகன்லாலை பார்த்து வளர்ந்த நான், இன்று அவருடனேயே படத்தில் நடித்தது கனவு நனவான தருணம் என்று தான் சொல்ல வேண்டும். தன்னால் ஒரு காட்சி ரீ டேக் ஆகிவிட்டால், நான் ஒரு வளரும் நடிகை, வயதில் சிறியவள் என்று கூட நினைக்காமல் மன்னித்துக் கொள் மகளே இன்னொரு டேக் போகலாமா என்று ஸாரி கேட்பார்.
அதேபோல ஒரு காட்சியை எடுக்கும்போது மகளே இந்தக் காட்சிக்கு டைட் பிரேம் வைத்திருக்கிறார்கள். அதனால் கொஞ்சம் நகர்ந்து நில் என்று சொல்வார். பொதுவாக இது படப்பிடிப்பில் உதவி இயக்குனர் செய்யும் பணி. ஆனால் இது போன்ற விஷயங்களை கவனித்து சரி செய்வார் மோகன்லால். இதெல்லாம் தொழில் மீது அவர் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது” என்று பிரமிப்பு விலகாமல் கூறுகிறார் ஆர்ஷா பைஜூ.