விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
ஹிந்தியில் 'பவால்', 'சிச்சோரே' ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, தற்போது 'ராமாயணா' எனும் படத்தை இயக்கி வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யஷ் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தை 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகத்தை 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அவருடன் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து பணியாற்ற உள்ளதாக கிட்டத்திட்ட உறுதியான தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டதற்கு, 'ரகசியம்' என்று மட்டும் சூசகமாக பதிலளித்தார். ஹான்ஸ் ஜிம்மர் இசையமைக்கவில்லை எனில் ரஹ்மான் மறுத்திருப்பார்; ஆனால் அவர் ரகசியம் என மட்டும் சமாளித்தது ஏறக்குறைய உறுதிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
ஹான்ஸ் ஜிம்மர், 'லயன் கிங், டூனே' ஆகிய ஹாலிவுட் படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளையும் வென்றுள்ளார். அத்துடன் 12 முறை ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலுக்கும் தேர்வானவர்.