50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் 16வது படம் 'மண்டாடி' . 'செல்பி' என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். கதாநாயகனாக சூரி நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுஹாஸ் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.
கதா நாயகியாக 'சாட்டை' மஹிமா நம்பியார் சிறிய இடைவெளிக்கு பிறகு நடிக்கிறார். இவர்கள் தவிர சத்யராஜ், ரவீந்திரா விஜய், சாச்சனா நமிதாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி கூறியதாவது: காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 'மண்டாடி' என்று அழைக்கின்றனர்.
மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல,பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக்கூடியவர் மண்டாடி.
காமெடியனில் இருந்து கதை நாயகனாக மாறிக்கொண்டிருக்கும் சூரிக்காகவே எழுதப்பட்ட கதை. மண்டாடி கதாபாத்திரமும் அவரை மனதில் வைத்தே எழுதப்பட்டது. இந்த படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும்.
மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது. அதை சூரி போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.
ஜி.வி. பிரகாஷ் இசையும், எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்ஷன் படமாக உருவாகிக்கொண்டு வருகிறது. என்றார்.