‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், இந்த படத்தில் ரஜினியை கருத்தில் கொண்டு பல மாற்றங்களை செய்திருப்பதாக கூறுகிறார். குறிப்பாக, இதற்கு முந்தைய எனது படங்களை என்னுடைய பாணியில்தான் முழுமையாக இயக்கியிருந்தேன். ஆனால் இந்த படத்தை ரஜினிக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு, ஒரு பாணி இருப்பதால் அதற்கேற்ப எனது ஸ்டைலை மாற்றி காட்சிகளை உருவாக்கி இருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், எனது முந்தைய படங்களில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றதை போன்று இந்த படத்திலும் இடம்பெறுகிறது. என்றாலும் ரஜினி படம் என்பதால் அவரது ரசிகர்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப வித்தியாசமாக படமாக்கி இருக்கிறேன். கூலி படம் 100% ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தக் கூடியதாகவே இருக்கும் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களுக்கும் சம அளவு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. யாரையுமே வீணடிக்கவில்லை. அதனால் இந்த படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் தியேட்டருக்கு வரும்போது எந்த குறையும் சொல்லாமல் திருப்திகரமாக வெளியே செல்வார்கள் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.