விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா அடுத்து 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு பட டீசரை வெளியிட்டனர். இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதேசமயம் படத்தின் முதல்பார்வையில் அவர் சுருட்டு பிடிப்பது போன்று வெளியானது சலசலப்பையும் ஏற்படுத்தியது.
படம் ரிலீஸ் பற்றி ஆர்.ஜே பாலாஜி கூறும்போது “ எங்களால் முடிந்தவரை 'கருப்பு' படத்தை சுட சுட தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர முயற்சி பண்றோம். கடந்த ஒரு வருடமாக என்னுடைய மொத்த குழுவும் இந்தப் படத்திற்காக தான் வேலை செய்து கொண்டிருக்கிறோம். மிக சந்தோஷமாக சாய் அபியங்கரின் இசையை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப்படத்தை 5 எழுத்தாளர்கள் எழுதியுள்ளோம். மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.