பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நமது வாழ்வியலுடன் கலந்தது பாடல்கள். சினிமா பாடல்கள் என்று வந்த பிறகு அது நம்மை நிறையவே ஆக்கிரமித்துக் கொண்டது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை தினசரி வாழ்வில் பாடல்கள் பல விதங்களில் நம்மிடம் கலந்துள்ளன.
ரேடியோக்கள், டேப் ரிக்கார்டர்கள், சாட்டிலைட் சானல்கள், மியூசிக் சானல்கள், யு டியூப் தளங்கள், மொபைல் போன்கள் என காலத்திற்கேற்ப மாறி மாறி தற்போது ரீல்ஸ் வீடியோக்கள் வரை வந்துள்ளன.
இப்போதெல்லாம் ஒரு பாடல் சூப்பர் ஹிட் பாடல் என்ற அளவீட்டை எவ்வளவு ரீல்ஸ் வீடியோக்கள் வந்து வைரலாகியுள்ளது என்று கணக்கிடும் அளவிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
யு டியூபில் 100 மில்லியன் பார்வைகள் கடந்தவை மட்டும் சூப்பர் ஹிட் பாடல்கள் அல்ல, ரீல்ஸ் வீடியோக்களிலும் மில்லியன் அன்ட் மில்லியன் பார்வைகள் கடப்பவைதான் சூப்பர் ஹிட் பாடல்கள் என பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போதைய 'ரீல்ஸ்' டிரென்டிங்கில் 'ரெட்ரோ' படத்தின் 'கனிமா' பாடல்தான் அதிக அளவில் வைரலானது. அடுத்து கடந்த வாரம் வெளியான 'தக் லைப்' பாடலான 'ஜிங்குச்சா' ஆரம்பித்து வைத்துள்ளது. இந்தத் திருமணப் பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோக்கள் அதிகம் வர ஆரம்பித்தால் இனி படத்துக்குப் படம் திருமணப் பாடல் 'வச்சே' ஆக வேண்டும் என வந்துவிடுவார்கள்.




