லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில் மே 1ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பதே உண்மை.
இருந்தாலும் படம் வெளியான முதல் நாளில் 46 கோடி, நான்கு நாட்களில் 104 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். தியேட்டர் வசூல், தியேட்டர் அல்லாத வருவாய் என மொத்தமாக 235 கோடி என படம் வெளியான 18வது நாளில் அறிவிப்பு செய்தார்கள்.
இந்நிலையில் இப்படம் மே 31ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தியேட்டர்களில் பெரிய வரவேற்பைப் பெறாத சில படங்கள் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெறுவதுண்டு. அப்படி ஒரு வரவேற்பு இப்படத்திற்குக் கிடைக்குமா என சில நாட்கள் காத்திருப்போம்.