மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
இந்தியத் திரையுலகத்தில் ஹிந்தி படங்களுக்கு அடுத்து அதிக தியேட்டர் வருவாய் கொடுக்கும் படங்கள் தெலுங்குப் படங்கள். தெலுங்கு மொழி பேசும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஆந்திராவில் 1100 தியேட்டர்களும், தெலங்கானாவில் 500 தியேட்டர்களுமாக மொத்தம் 1600 தியேட்டர்கள் உள்ளன.
சில தனி நபர்கள், சில மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் அதிகமான தியேட்டர்களை நடத்தி வருகிறார்கள். அவற்றில் பல தியேட்டர்கள் 'லீஸ்' அடிப்படையில் நடத்தப்படுபவை என்கிறார்கள். தியேட்டர்களை இப்படி 'லீஸ்', அதாவது 'குத்தகை' அடிப்படையில் எடுத்து நடத்துபவர்கள்தான் தியேட்டர் ஸ்டிரைக்கை அறிவித்து வாபஸ் பெற்றவர்கள் என்கிறார்கள்.
இரண்டு மாநிலங்களிலும் 'குத்தகை' அடிப்படையில் நடத்தப்படும் தியேட்டர்களில் 12.5 சதவீதத் தொகையை ஒரு வாரத்திற்கான வாடகையாக தியேட்டர்காரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அது தியேட்டரை வாடகைக்கு எடுத்து படத்தை ஓட்டும் முறை. மீதுமுள்ள தொகையைத்தான் வினியோகஸ்தரும், தயாரிப்பாளரும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும்.
அதை சதவீத அடிப்படையில் மாற்ற வேண்டும் என்பது தியேட்டர்காரர்களின் கோரிக்கை. அதாவது ஒரு வார வசூலில் 25 சதவீதம் தியேட்டர்காரர்களுக்குத் தர வேண்டும். அப்படிப் பார்த்தால் 6 லட்சம் என்பது 12 லட்சமாக வருவாய் வரும். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இந்த முறையைத்தான் பின்பற்றி படத்தைத் திரையிடுகிறார்கள். அது போலவே சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களுக்கும் வழங்க வேண்டும், அதனால்தான் ஜுன் 1ம் தேதி முதல் ஸ்டிரைக் என்று அறிவித்தார்கள்.
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தரப்பிலிருந்து வந்த செய்தியால் அந்த தியேட்டர் ஸ்டிரைக் உடனடியாக வாபஸ் பெறப்பட்டு காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களை சில தனி நபர் சினிமா பிரபலங்கள்தான் 'லீஸ்' எடுத்து நடத்தி வருகிறார்களாம். இப்படி ஒரு ஸ்டிரைக் நடந்தால் அவர்கள்தான் பலன் அடைவார்கள். அதனால், தயாரிப்பாளர்களுக்கான, வினியோகஸ்தர்களுக்கான வருவாய் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
தெலுங்குத் திரையுலகத்தில் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் இந்த ஸ்டிரைக் அறிவிப்பை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தன. ஆனால், தியேட்டர்களை பெரும்பாலும் குத்தகை எடுத்து நடத்தும் 'மாபியா' போல செயல்பட்டு வரும் சிலரை பெயர் சொல்லாமல் 'அந்த நால்வர்' எனக் குறிப்பிட்டு பவன் கல்யாண் சொல்லியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'அந்த நால்வர்' யார் என்பதுதான் தற்போதைய சர்ச்சை. அவர்களில் யார் வாயைத் திறந்து தங்களது மறுப்பை முதலில் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அந்த நால்வரின் தான் ஒருவரல்ல என்று விளக்கம் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர் நடுநிலை வகிக்க உள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருக்கிறதாம்.
தெலுங்குத் திரையுலகத்தில் இப்படி 'மாபியா', 'மோனோபாலி'யாக நடந்து கொள்ளும் சிலர் பற்றி எழுந்துள்ள சர்ச்சை வரும் நாட்களில் எப்படிப் போகப் போகிறது என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.