சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அதிகாரப்பூர்வ அனுமதி அளிக்கும். சுமார் ஒரு வார காலத்திற்கு அந்த அனுமதி இருக்கும். அப்படி உயர்த்தப்பட்ட கட்டணங்களை வைத்துத்தான் அவர்கள் தங்களது படங்கள் அதிக வசூலைக் குவித்தது என பெருமைப்பட்டு வருகிறார்கள்.
நாளை வெளியாக உள்ள ரஜினிகாந்த், நாகார்ஜுனா நடித்த தமிழ்ப் படமான 'கூலி', ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர் நடித்த ஹிந்திப் படமான 'வார் 2' ஆகிய படங்கள் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாகின்றன. அந்தப் படங்களுக்கும் இரண்டு மாநில அரசுகளிடமும் வழக்கம் போல டிக்கெட் கட்டண உயர்வுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், தெலுங்குத் திரையுலகினரில் சிலரும், ரசிகர்களும் இது குறித்து தங்களது எதிர்ப்புகளை கடுமையாகப் பதிவு செய்தனர். டப்பிங் படங்களுக்கு அப்படிப்பட்ட டிக்கெட் கட்டண உயர்வு கொடுக்கக் கூடாது என்பது அவர்களது வாதமாக இருந்தது.
இதனால், நேற்று இரவு வரையில் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் முன்பதிவு ஆரம்பமாகவில்லை. கடைசியாக தெலங்கானாவில் டிக்கெட் கட்டண உயர்வு இல்லை என்று சொல்லப்பட்டதால் முன்பதிவு ஆரம்பமானது. ஆந்திர மாநில அரசு மட்டும் 10 நாட்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.100, சிங்கிள் தியேட்டர்களில் ரூ.75 உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதோடு நாளை மட்டும் அதிகாலை 5 மணிக்கு காட்சிகளை ஆரம்பிக்கவும் அனுமதித்துள்ளார்கள்.'வார் 2' படத்திற்கும் இது போன்ற அனுமதிதான் வழங்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதி கிடையாது. முதல் நாள் முதல் காட்சி காலை 7 மணிக்கு ஆரம்பிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
தமிழ்ப் படங்கள் பலவற்றின் படப்பிடிப்பு ஐதராபாத்தில்தான் நடைபெறுகிறது. 'கூலி' படத்தின் படப்பிடிப்பு கூட பெரும்பாலும் அங்குதான் நடைபெற்றது. தமிழ்ப் படங்களில் தெலுங்கு தொழிலாளர்களுக்குத்தான் நிறைய வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அப்படியிருக்க இந்த டிக்கெட் கட்டண உயர்வுக்கு தெலுங்குத் திரையுலகினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.