சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ரஜினிகாந்த் நடித்த கூலி மட்டுமல்ல, ஹிர்த்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடித்த வார் 2 படமும் நாளை ரிலீஸ் ஆகிறது. இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள், இரண்டு படங்களிலும் நட்சத்திர பட்டாளங்கள் இருக்கின்றன. இந்த படங்களில் யார் வெற்றி பெறப் போகிறார்கள். வசூலை அள்ளப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பான் இந்தியா படமாக கூலி உருவாகி இருப்பதால் ரஜினிகாந்த் தவிர தெலுங்கில் இருந்து நாகர்ஜூனா, கன்னடத்தில் இருந்து உபேந்திரா, ஹிந்தியில் இருந்து அமீர்கான், மலையாளத்தில் சவுபின் ஷாகிர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருக்கின்றன. இவர்களை தவிர தமிழில் இருந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், காளி வெங்கட், சார்லி உட்பட பலர் இருக்கிறார்கள். 375 கோடி பட்ஜெட்டில் உருவாகி, பல மொழிகளில் கூலி ரிலீஸ் ஆக உள்ளது. ஆயிரம் கோடி வசூல் என்ற இலக்குடன் கூலியை ரிலீஸ் செய்கிறார்கள்.
வார் 2வை விட கூலி முன்பதிவில், வரவேற்பில் முன்னிலையில் இருக்கிறது. அதேசமயம், வார் 2வும் சாதாரண படமல்ல, ஹிந்தியில் பல வெற்றி படங்களை கொடுத்த யஷ் ராஜ் அந்த படத்தை தயாரித்துள்ளது. படத்தின் பட்ஜெட் 400 கோடி என்று கூறப்படுகிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்திரா என்ற வெற்றி படத்தை கொடுத்த அயன் முகர்ஜி இயக்கி உள்ளார்.
ஹிந்தியில் பிரபலமான ஹீரோ ஹிருத்திக் ரோஷனும், தெலுங்கில் பிரபலமான ஜூனியர் என்டிஆரும் வார் 2வில் முதன்முதலில் இணைந்துள்ளனர். கியாரா அத்வானி ஹீரோயின். வார் படத்தின் முதல் பாகம் 2019ல் வெளியானது. அதில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப், வாணி கபூர் நடித்தனர். அதுவும் வெற்றிப்படம், 477 கோடி வரை வசூலித்தது. இரண்டு பெரிய ஹீரோக்கள் நடித்த படம் என்பதால் தெலுங்கு, ஹிந்தியில் வார் 2வுக்கும் வரவேற்பு உள்ளது. இன்னும் சில நாட்களில் எந்த படம் ஹிட், வசூலில் யார் சாதனை படைத்தார்கள் என்பது தெரிய வரும்.