பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” |
நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46வது படத்தில் நடிக்கவுள்ளார். மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் .
சமீபத்தில் படத்தின் பூஜை நடந்த நிலையில் இதன் படப்பிடிப்பு வருகின்ற மே 30ம் தேதியன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளனர். படப்பிடிப்பை மூன்று கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படம் அடுத்தாண்டு மே 1ம் தேதி தான் வெளியாகும் என்கிறார்கள். இந்தாண்டு மே 1ல் சூர்யா நடித்த ரெட்ரோ படம் வெளியானது. அதேதேதியில் சூர்யா 46 படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.