‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ் சினிமா உலகில் எப்போதுமே இரண்டு முன்னணி நடிகர்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவும். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியவை. அதற்குப் பிறகு சிம்பு - தனுஷ் என்று ஒரு போட்டி சூழல் உருவானது. ஆனால், அவர்கள் இருவருமே அந்த ஒரு சூழலை தங்களுக்கு சாதகமாக பெரிய அளவில் மாற்றிக் கொள்ளத் தவறிவிட்டார்கள். அதற்குள் அவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் முன்னேற ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு அடுத்த மாதத்தில் சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'தக் லைப்' படத்தில் சீனியர் நடிகரான கமல்ஹாசன்தான் 'மெயின் லீட்'. அதே அளவுக்கு சமமான கதாபாத்திரத்தில் சிம்பு இருக்கிறார். தெலுங்கின் முக்கிய இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படத்தில் அவர்தான் 'மெயின் லீட்'. ஆனால், அதே அளவுக்கு சமமான கதாபாத்திரத்தில் சீனியர் நடிகரான நாகார்ஜுனாவும் நடித்திருக்கிறார். இருவரது படங்களிலும் சீனியர் நடிகர்கள் என்பது ஒரு ஒற்றுமை.
பான் இந்தியா வெளியீடாக வர உள்ள இந்த இரண்டு படங்களின் கதையும் சிறப்பாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அந்தப் படங்களின் முன்னோட்டத்தைப் பார்த்தபோது ஏற்பட்டுள்ளது. இரண்டு வார இடைவெளியில் அவர்களது படங்கள் வெளிவருவதால் இருவரது நடிப்பும், கதாபாத்திரங்களும், ஏன் வசூலும் கூட ஒப்பிட்டுப் பேச வாய்ப்புள்ளது.