மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

சமீபத்தில் 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க முடியும். அதற்கு மேல் முடியாது என்கிற காரணத்திற்காக சந்தீப் ரெட்டி வங்காவின் 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறி இருந்தார். இப்போது வரை பாலிவுட்டில் இது குறித்து சர்ச்சை கருத்துக்கள் பரவி தான் வருகிறது.
தற்போது ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி அளித்த வித்யா பாலனிடம் தீபிகா படுகோனின் இந்த செயல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் கூறியதாவது, "தாய்மார்கள் குறைந்த மணி நேரங்கள் வேலை, நெகிழ்வு நேரங்களில் வேலை செய்வதற்கான உரையாடல்கள் தற்போது அனைத்து துறைகளிலும் நடைபெற்று வருகிறது. அவை நியாயமான உரையாடல்கள் என்று நான் கருதுகிறேன்.
குழந்தைகள் பெற்றெடுக்கும் ஆரம்ப ஆண்டுகளில் புதிய தாய்மார்கள் அல்லது பெண்களை நாம் இழக்காமல் இருக்க ஒவ்வொரு துறையும் அந்த நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர். பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரங்கள் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதாது. ஏனெனில், நான் ஒரு தாய் அல்ல. அதனால், என்னால் 12 மணிநேர படப்பிடிப்பில் பணிபுரிய முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.