'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

சமீபகாலமாகவே விமான சேவை குறைபாடுகளுக்காக இண்டிகோ விமான நிறுவனம் அடிக்கடி விமர்சனங்களுக்கு உள்ளாகின்றது. அந்த வகையில் கடந்த சில நாட்களிலேயே பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் குறித்த நேரத்தில் கிளம்பாமல் பல மணி நேரம் தாமதமாகி கிளம்பி சென்றன. இதனால் பயணிகள் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் சில சமூக வலைதளத்தில் வெளியாகின.
இதனை கவனித்த பாலிவுட் நடிகர் சோனு சூட், “விமானம் புறப்படுவதும் தாமதமாவதும் அல்லது விமான சேவை ரத்து செய்யப்படுவதற்கும் அந்த விமான நிலைய கீழ்மட்ட ஊழியர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கு அது குறித்த விவரங்கள் கூட முழுமையாக சொல்லப்பட்டிருக்காது.
நானும் இதே போல என்னுடைய விமான பயணத்தில் பெர்சனலாக கடினமான சூழலை சந்தித்துள்ளேன். பயணிகளின் நிலை எனக்கும் தெரியும். இருந்தாலும் திருமண நிகழ்வுகள், முக்கியமான அலுவலக வியாபார விஷயமாக செல்ல வேண்டியவர்களுக்கு இந்த இடர்பாடுகள் கோபத்தை ஏற்படுத்தினாலும் கூட அடிமட்ட ஊழியர்கள் மீது உங்கள் கோபத்தை காட்ட வேண்டாம்.” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.




