நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது |
எவ்வளவு பெரிய விஐபிகளாக, சினிமா பிரபலங்களாக இருந்தாலும் எப்படியேனும் தங்களது விமான பயணங்களில் ஒரு முறையாவது மோசமான அனுபவத்தை சந்தித்து தான் வருகிறார்கள். அதுகுறித்து அவ்வப்போது பகிர்ந்தும் வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது 'ரதி நிர்வேதம்' புகழ் மலையாள நடிகை ஸ்வேதா மேனன் சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவையால் தான் பாதிக்கப்பட்டதையும் அதைத்தொடர்ந்து போராடி தனக்கான நியாயத்தை பெற்றதையும் வீடியோவாகவும் ஒரு மிகப்பெரிய பதிவாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் சாராம்சம் இதுதான்..
நேற்று முன் தினம் மும்பையில் இருந்து கொச்சிக்கு செல்வதற்காக இண்டிகோ ஏர்லைன் விமானத்தில் டிக்கெட் புக் செய்து இருந்தார் ஸ்வேதா மேனன். மதியம் 12 மணிக்கு புறப்படுவதாக இருந்த அந்த விமானம் சில காரணங்களால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக மதியம் 1:30க்கு கிளம்பும் என சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து குறுஞ்செய்தி ஸ்வேதா மேனனுக்கு வந்தது. இதை அடுத்து அதற்கேற்றபடி நேரத்தை கணக்கிட்டு விமான நிலையத்திற்கு வந்த சுவேதா மேனனுக்கு கவுண்டரில் இருந்த ஏர்லைன்ஸ் ஊழியர்கள் அந்த விமானம் 12 மணிக்கே கிளம்பி சென்று விட்டதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர்.
தனக்கு மட்டும் தான் இப்படி தவறாக நடந்து விட்டதோ என நினைத்து அருகில் இருந்தோரிடம் விசாரிக்க கிட்டத்தட்ட தன்னை போல 22 பேருக்கு இதுபோன்ற தவறான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அவர்களும் இந்த விமானத்தை தவறவிட்டது ஸ்வேதா மேனனுக்கு தெரிய வந்தது. அதேசமயம் கவுண்டரில் இருந்த சம்பந்தப்பட்ட விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட சிலரிடம் இதுகுறித்து மரியாதை குறைவாக பதில் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஸ்வேதா மேனன் தனது மொபைல் போனில் சோசியல் மீடியா பக்கம் மூலமாக லைவ்வாக அந்த ஊழியர்களின் செயல்பாட்டை படம்பிடிக்க துவங்க, அதனை தொடர்ந்து சற்று இறங்கி வந்த விமான நிறுவன பணியாளர்கள், அவர் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்திருந்தாலும் அவருக்கு அவரது டிக்கெட் தொகையை கையிலேயே திருப்பி தருவதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். அதை வாங்க மறுத்த ஸ்வேதா மேனன் இந்த டிக்கெட் தொகையை விட அடுத்ததாக நான் செல்லும் பிளைட்டின் டிக்கெட் தொகை இரு மடங்கு அதிகம். அப்படி நீங்கள் எனக்கு கட்டணத்தை திருப்பிக் கொடுத்தால் இரட்டிப்பாக கொடுக்க வேண்டும் உங்களால் முடியுமா என்று கேட்க அதற்கு ஊழியர்கள் பதில் சொல்லாது விழித்துள்ளனர்.
அதன்பிறகு இரவு 9 மணிக்கு மாற்று விமானத்தில் செல்வதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்கள். ஆனால் ஸ்வேதா மேனனோ கொச்சியில் மாலை 4 மணிக்கு தனக்கு மருத்துவ ரீதியாக அமெரிக்காவிலிருந்து வந்துள்ள டாக்டர் ஒருவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறது என்றும், தனக்கு உடனடியாக கொச்சி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பிடிவாதம் காட்டியுள்ளார். மேலும் மாலை 5 மணிக்கு கொச்சி செல்லும் இன்னொரு விமானம் இருப்பதை சுட்டிக்காட்டிய ஸ்வேதா மேனன் எங்களுக்கு அந்த விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்து கொடுங்கள், இல்லை என்றால் இது குறித்து மிகப்பெரிய நடவடிக்கை உங்கள் நிறுவனம் மீது எடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இதை தொடர்ந்து மாலை 5 மணி விமானத்தில் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட அந்த 22 பேரையும் ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். கொச்சி வந்து இறங்கிய ஸ்வேதா மேனனிடம் அங்கே இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் மும்பையில் அவருக்கு ஏற்பட்ட சேவை குறைபாட்டிற்கு தாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்வதாக கூறி அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். யாராக இருந்தாலும் விமான சேவை குறைபாடு இருந்தால் அதை தட்டிக்கேட்டு அங்கேயே தங்களுக்கான உரிமைகளை பெறுவதில் கறாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.