'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் மகாபாரதம், ராமாயணத்தில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்களை மையமாக கொண்டு அதிக படங்கள் வந்தன. அதன்பிறகு கடவுளின் அடியார்களான நாயன்மார்கள், குருக்கள் பற்றிய படங்கள் வந்தன. இதன் அடுத்த கட்டமாக வந்ததுதான் உள்ளூர் குல தெய்வங்களின் கதைகள்.
தமிழ்நாட்டில் உள்ள பிரபல அம்மன்கள், அவர்களது கோவிலை மையமாக கொண்டும், அவர்களின் பக்தர்களை மையமாக கொண்டும் நிறைய படங்கள் வந்து கொண்டிருந்தது. தொலைக்காட்சிகளின் வருகைக்கு பிறகு இது குறைந்து விட்டாலும் அவ்வப்போது, சாய்பாபா, அய்யப்பன் பற்றிய படங்கள் வந்தன. தற்போது 'மூக்குத்தி அம்மன்' படம் தயாராகி வருகிறது.
இந்த அம்மன் படங்களுக்கு முன்னோடி 1948ம் ஆண்டு வெளிவந்த 'மாரியம்மன்' படம். அம்மன் படங்களில் இது முதல் படம் என்றும் கூறலாம். இந்த படத்தை எல்.எஸ்.ராமச்சந்திரன் இயக்கி உள்ளார். பலவான்குடி சாமா இசை அமைத்துள்ளார். தஞ்சை ராமய்யா தாஸ் கதை, வசனம் எழுதி உள்ளார், பி.ஆர்.ராஜகோபாலய்யர் பாடல்களை எழுதி உள்ளார்.
டி.எஸ்.பாலையா, எஸ்.டி.சுப்பையா, கே.கே.பெருமாள், வி.வி.எஸ்.மணி, காளி என்.ரத்னம், எம்.இ.மாதவன், எம்.ஆர்.சந்தான லட்சுமி, டி.எஸ்.சகுந்தலா பத்மா, ஞானம், ஜெயா உள்ளிட்ட பலர்ட நடித்துள்ளனர். சேலம் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இந்த படத்தின் பிரதிகள் எதுவும் இப்போது இல்லை. மாரியம்மன் ஒரு பெண்ணாக உருவெடுத்து வந்து தன் பக்தர்களுக்கு அருள்பாலித்த கதையாக இந்த படம் உருவாகி இருந்தது.