'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
நடிப்பு, பாட்டு, தயாரிப்பு, இயக்கம், எழுத்து, ஓவியம் என கலையுலகின் அனைத்தையும் அறிந்திருந்த 'அஷ்டாவதானி'தான் நடிகை பி பானுமதி. சிறு வயதிலேயே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் மிகப் பெரிய ஆளுமையாக இருந்தவர். தமிழ் திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குனர்களின் வரிசையில் டி பி ராஜலக்ஷ்மிக்குப் பிறகு துணிச்சலாக தமிழ் திரைப்பட இயக்குநர் என்ற களம் கண்டு வெற்றி பெற்றவர்தான் நடிகை பி பானுமதி.
தமிழ் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான எம் கே தியாகராஜ பாகவதர் தொடங்கி பி யு சின்னப்பா, டி ஆர் மஹாலிங்கம், எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என அன்றைய முன்னணி நாயகர்களின் ஏராளமான திரைப்படங்களில் நாயகியாக நடித்திருந்ததோடு, தமிழ் திரையுலகின் மூவேந்தர்கள் என்றழைக்கப்பட்டு வந்த எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகியோர் இணைந்து நடிக்க பெரிதும் விரும்பிய நடிகையாகவும் இருந்த இவர், ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்திற்காக நடித்துக் கொடுத்த திரைப்படம்தான் “அன்னை”.
“தர்த்தி கே லால்”, “தோ பிகா ஜமீன்”, “சோட்டி பஹன்”, “காபூலி வாலா”, “வக்த்”, “கரம் ஹவா” ஆகிய படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவரும், இந்திய மக்கள் நாடக மன்றத்தின் தலைவரும், பழம்பெரும் ஹிந்தி நடிகருமான பால்ராஜ் சஹானி, நடிகை பி பானுமதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தாங்கள் நடித்த “அன்னை” திரைப்படத்தை நான் பார்ப்பது இரண்டாவது முறையோ அல்லது மூன்றாவது முறையோ தெரியவில்லை. எனக்கு தமிழ் மொழி தெரியாவிட்டாலும் உங்களது சிறப்பான நடிப்பிற்காக இன்னும் ஒரு டஜன் முறையாவது “அன்னை” திரைப்படத்தைப் பார்ப்பேன்.
நீங்கள் நடித்திருக்கும் வேறு சில படங்களில் இதைவிட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த “அன்னை” திரைப்படத்தைப் பொருத்தவரை, உங்களது நடிப்பு என்பது சிறப்பானதுமட்டுமின்றி மிக மிக உயர்வானதாகவும் இருக்கிறது. வசனம் ஏதும் பேசாமல், உங்கள் பார்வையாலும், நடை, உடை, பாவனைகளாலும் நீங்கள் வெளிக்காட்டியிருக்கும் நடிப்பு பற்றி ஒரு தரமான விமர்சகனால் ஒரு புத்தகமே எழுத முடியும். எனது பாராட்டுதல்கள் மட்டும் உங்களது வெற்றிகரமான நடிப்பிற்கு ஒரு பரிசாகிவிடாது.
நம் நாட்டுப் படங்களை விடுங்கள். மேலை நாட்டுப் படங்களில் கூட, மிக மிக அரிதாகத்தான் இம்மாதிரியான உயர்தரமான நடிப்பை நான் பார்க்க முடிந்திருக்கிறது என்று நடிகை பி பானுமதிக்கு எழுதியிருந்த தனது பாராட்டுக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் பால்ராஜ் சஹானி. 1962ல் வெளிவந்த “அன்னை” திரைப்படத்தை, 1966ல் “லாட்லா” என்ற பெயரில் ஹிந்தியில் தயாரித்தபோது, தமிழில் எஸ் வி ரங்காராவ் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தை ஹிந்தியில் ஏற்று நடித்திருந்தது பால்ராஜ் சஹானி.
இரு மொழிகளிலும் படத்தை இயக்கியது இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன்-பஞ்சு. “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று, பூவாமல் காய்க்காமல் இருந்த மரம் ஒன்று” என்ற பானுமதியின் இனிய குரலில் பதிவு செய்யப்பட்ட இத்திரைப்படத்தின் பாடல் இன்றும் பல எஃப் எம் ரேடியோக்களில் இரவு நேரங்களில் ஒலிபரப்பு செய்யப்பட்டு நம்மை தாலாட்டி தூங்கச் செய்யும் ஒரு தாயுள்ளப் பாடலாகவே இருக்கின்றது என்றால் அது மிகையன்று.