டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

'கூலி' படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பஹத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் உள்ள ஆணைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆணைக்கட்டியில் இருந்து மாங்கரைக்கு ரஜினிகாந்த் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோயிலில் இறங்கி சாமி தரிசனம் செய்திருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கோயில் வாசலில் ரஜினியின் கார் வந்து நின்றதும், பூசாரி ஓடிவந்து அவரை வரவேற்க, ரஜினி கோயிலுக்குள் சென்றதும் பூஜை தீபாராதனை நடத்தப்பட்டு சாமி தரிசனம் செய்கிறார். அதையடுத்து அவருக்கு பூசாரி விபூதி பூசி விடும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.