இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'ரெட்ரோ' படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தை முக்கிய விஐபிக்களுக்கு போட்டு காண்பித்து கருத்துக்கேட்டு வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். குறிப்பாக, சூர்யாவுக்கு முதல் காட்சியை போட்டு காண்பித்திருக்கிறார். அப்போது முழு படத்தையும் பார்த்துவிட்டு ''படம் ரொம்ப திருப்தியாக உள்ளது. என்னை சந்தோஷப்படுத்தி விட்டீர்கள். இந்த படம் என்னுடைய ரசிகர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்'' என்று கூறியுள்ளார் சூர்யா.
அதோடு இந்த படத்தை இன்னும் பார்க்காத ஜோதிகாவோ, டிரைலரை பார்த்து விட்டேன். இந்த படம் வெற்றி பெறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் டிரைலரிலேயே தெரிகிறது என்று கார்த்தி சுப்பராஜ் இடத்தில் தெரிவித்திருக்கிறார். இப்படி சூர்யா- ஜோதிகா இரண்டு பேரிடத்தில் இருந்தும் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்ததால் பெரிய உற்சாகத்தில் காணப்படுகிறார் கார்த்திக் சுப்பராஜ்.