நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

1984ம் ஆண்டு வெளியான 'மைடியர் குட்டிச்சாத்தான்' படைத்த பல சாதனைகள் பற்றி அனைவரும் அறிந்ததுதான். முதல் 3டி படம், 40 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி அந்தக் காலத்திலேயே 25 கோடி வரை வசூலித்த படம், எல்லா மொழிகளிலும் அந்தந்த மொழி நடிகர்களை இணைத்து வெளியிட்ட படம். மலையாளத்தில் கோடியில் வசூலித்த முதல்படம். இப்படி பல சாதனைகள் அந்த படத்திற்கு உண்டு.
3டி கண்ணாடி அணிந்து கொண்டு உற்சாகமாக படம் பார்த்து திரையில் இருந்து வரும் ஐஸ்கிரீமை தொட முயன்று தோற்ற அனுபவம் 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்தது. ஆனாலும் குட்டிச்சாத்தானுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அது பல தலைமுறைகளை வாழ வைத்த படம். இந்த படத்தின் லாபத்தின் பெரும் பகுதியை கொண்டு சென்னை அருகே 'கிஸ்கிந்தா' என்ற தீம் பார்க்கை உருவாக்கினார் தயாரிப்பாளர் அப்பச்சன்.
படத்தில் இடம்பெற்ற 'சுட்டி குழந்தைகளே' என்ற பாடலுக்காக பல லட்சம் செலவில் செட் அமைத்த அப்பச்சனுக்கு அதே இடத்தில் ஒரு தீம் பார்க் கட்டும் ஆசையும் வந்தது. படம் வெளியான பிறகு அது நிறைவேறவும் செய்தது. இன்றைக்கு அந்த தீம் பார்க்கின் மதிப்பு ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். ஒரே ஒரு படம் பல தலைமுறையின் அசையா சொத்தானது. சினிமா செய்யும் மேஜிக்குகளில் இதுவும் ஒன்று.