ஒளிப்பதிவாளரைத் தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் கார் பரிசளித்த சூர்யா | 'கட்டா குஸ்தி 2' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்! | தனுஷ் 55வது படத்தில் 'கருப்பு' பட நடிகர்! | தனுஷ் அரசியலுக்கு வருவாரா இயக்குனர் கஸ்தூரிராஜா சொன்ன பதில் | 'கருப்பு' ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா | மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன் | 'ஜனநாயகன்' பிரச்னை.. எனக்கு சொல்ல தைரியமில்லை: எச்.வினோத் ஓபன் டாக் | பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார் | ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில் | விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்' |

பழைய படத்தின் டைட்டில்களை மீண்டும் பயன்படுத்துவது சில காலமாக நடப்பதுபோல், சில பஞ்ச் வசனங்களை படத்தின் டைட்டிலாக வைப்பதும் அவ்வபோது நடக்கும். அந்த வகையில், 1988ம் ஆண்டு வெளியான 'என் வழி தனி வழி' படத்தை வி.அழகப்பன் இயக்கி தயாரித்தார், ரகுவரன், கீதா, சாந்திப்பிரியா, எஸ்.எஸ்.சந்திரன், செந்தில் நடித்தனர். சந்திரபோஸ் இசை அமைத்தார். படம் தோல்வி அடைந்தது.
ஆனாலும், இந்த டைட்டிலில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, 1999ல் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'படையப்பா' படத்தில் பஞ்ச் டயலாக் வைத்திருப்பர். ரஜினிகாந்த் எதிரிகளை பார்த்து, 'என் வழி தனி வழி' என பேசிய பஞ்ச் டயலாக், பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. படமும் மிகப்பெரிய ஹிட்டானது.
பின்னர் 2015ல் மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே, பூனம் கவுர், மீனாட்சி தீட்சித், ரோஜா, ரகுமான், ராதாரவி ஆகியோர் நடிப்பில் அதே 'என் வழி தனி வழி' என்ற டைட்டிலில் படம் வெளியானது. 'அப் தக் சாப்' என்ற இந்தி படத்தின் ரீமேக்கான இப்படமும் தோல்வியடைந்தது.
ஒரே வாக்கியம் இரண்டு முறை படமாக வந்து தோல்வியடைந்துள்ளது, அதனை 'பஞ்ச்' டயலாக்காக வைத்த படம் ஹிட்டானது அபூர்வமாக பார்க்கப்படுகிறது.




