லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் அடுத்த வாரம் மே 1ம் தேதி வெளியாக உள்ள படம் 'ரெட்ரோ'. இப்படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
சூர்யாவிற்கு தெலுங்கில் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது. படத்தில் தெலுங்கு ரசிகர்களின் அபிமான நாயகியான பூஜா ஹெக்டேவும் நடித்திருப்பதால் அது படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கிறது. தமிழில் இப்படத்திற்கான பிரம்மாண்ட விழாவை கடந்த வாரம் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடத்தினார்கள்.
நாளை ஐதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் இப்படத்தின் விழா நடைபெற உள்ளது. அதில் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். சூர்யாவுடன் ஒப்பிடும் போது விஜய் தேவரகொண்டா ஜுனியர் நடிகர்தான். இருந்தாலும் 'ரெட்ரோ' படம் இளைஞர்களுக்கான படம் என்பதால் தெலுங்கில் உள்ள இளம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் விஜய்யை அழைத்துள்ளார்களாம்.