விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் சில தினங்களுக்கு முன் பிராமின்கள் குறித்து அவதூறான வார்த்தை ஒன்றை கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து இவரது இந்த கருத்துக்கு மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்தன. அதுமட்டுமல்ல அவரது குடும்பத்திற்கும் மிரட்டல்கள் விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டார் அனுராக் காஷ்யப்.
ஆனாலும் இது குறித்து அவர் அப்போது கூறும்போது, “நான் சொன்ன கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை. என்னை எவ்வளவு வேண்டுமோ நீங்கள் திட்டிக் கொள்ளுங்கள். ஆனால் என்னுடைய குடும்பத்தை பற்றி எதுவும் சொல்லாதீர்கள். உங்களுக்கு என்னுடைய மன்னிப்பு தான் வேண்டுமென்றால் இதோ இங்கே தருகிறேன். எங்கள் பெண்களை விட்டு விடுங்கள். நீங்கள் எப்படிப்பட்ட பிராமினாக இருக்கிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதோ என்னுடைய மன்னிப்பு” என்று கூறி இருந்தார்.
அப்போதைக்கு தனது குடும்பத்தினர் மிரட்டல்களை சந்திக்கக் கூடாது என்பதற்காக மட்டுமே அவர் பெயரளவில் மன்னிப்பு கேட்டதோடு தான் பேசிய வார்த்தைகளில் ஒன்றும் தவறு இல்லை என்பது போல அவர் பேசியது இந்து மத உணர்வாளர்களின் கோபத்தை இன்னும் தூண்டிவிட்டது. தொடர்ந்து அவருக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் அதிகரிக்கவே தற்போது வேறு வழி இன்றி பிராமின்கள் குறித்து தான் பேசியது தவறுதான் எனது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் அனுராக் காஷ்யப்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னிடம் ஒருவர் கேள்வி கேட்டபோது நான் என்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விட்டேன். இந்த சமூகத்தை சேர்ந்த முக்கியமான பலர் எனது வாழ்க்கையில் நெருங்கியவர்கள் தான். அதனால் என்னுடைய வார்த்தைகள் அவர்களை காயப்படுத்தி இருக்கும் என்பதை உணர்ந்து வருத்தப்படுகிறேன். என்னுடைய குடும்பம் மட்டுமல்ல நான் மிகவும் மதிக்கின்ற பல பெரிய மனிதர்களும் காயப்பட்டு உள்ளனர்.
நான் பிராமின் சமூகத்தை புண்படுத்தும் விதமாக பேசியதற்காக மனப்பூர்வமாக அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். எந்த ஒருவரையும் குறி வைத்து நான் உள்நோக்கத்துடன் பேசவில்லை. ஒரு கோபமான சமயத்தில் சில தவறான விஷயங்களை எழுதி விட்டேன். இனி எதிர்காலத்தில் என்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தும் விதமாக பயிற்சிகளை எடுத்துக் கொண்டு செயல்படுவேன். அப்படியும் யாருடனாவது எந்த பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்றால் கூட சரியான மொழியை பயன்படுத்துவேன். என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.