தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்! | பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா! | அக்., 31ல் ஒரே பாகமாக வெளியாகும் ‛பாகுபலி : தி எபிக்' | 'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் |
பவன் பிரபா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ரூபேஷ், அகன்க்ஷா சிங், ராஜேந்திர பிரசாத், அர்ச்சனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'சஷ்டிபூர்த்தி'.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள இசையமைப்பாளர் கீரவாணியும் இதில் கலந்து கொண்டார்.
இளையராஜா மீது தங்களுக்குள்ள அபிமானம், மதிப்பு, மரியாதை ஆகியவற்றைப் பற்றி கீரவாணி, ராஜேந்திர பிரசாத் இருவரும் தங்களது பேச்சில் மிக அழுத்தமாகக் குறிப்பிட்டார்கள்.
நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், “எனக்கு இசை தெரியும்னு நான் எப்பவும் நினைக்கல. அந்த இசை எனக்கு தெரியும்னு மக்கள் நினைக்கிறாங்க. ஒரு பாட்டு எனக்கு எப்படி வருதுன்னு எனக்கு உண்மையிலேயே தெரியாது. அது எனக்குத் தெரிஞ்சிருந்தா, அந்த நிமிஷமே நான் இசையமைப்பதை நிறுத்திடுவேன்.
நான் செய்த வேலை இந்தப் படத்தில் உள்ளது. சில பாடல்கள் ஏற்கனவே கேட்கப்பட்டுவிட்டன. மற்றவை கேட்கப்பட உள்ளன. அவை மீண்டும் மீண்டும் கேட்கப்படும் என்று நான் நம்புகிறேன்.
கீரவாணி இந்தப் படத்திற்காக எனக்காக ஒரு பாடலை எழுதி அதை வாசித்த போது, அவர் என்னுடனான தனது ஆத்மத் துணையைப் பற்றி எழுதியது போல் உணர்ந்தேன். அந்தப் பாடலில் அவர் என் மீதான தனது தூய அன்பைக் காட்டினார். படக்குழுவினருக்கு எனது ஆசிகள். புதியவர்களின் முயற்சிகளை ஊக்குவிக்க நான் இங்கு வந்தேன். புதியவர்களை ஊக்குவிப்பது எனது இயல்பு,” என்று குறிப்பிட்டார்.
ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளரான கீரவாணி பேசுகையில், "இந்தப் படத்தில் இளையராஜாவின் இசைக்காக நான் ஒரு பாடல் எழுதினேன். அந்தப் பாடல் இப்படித்தான் செல்கிறது: 'இது ஏதோ ஒரு பிறவியில் ஏதோ ஒன்றின் அறிமுகம்.. நீ என்னுடையவன், இது என்னுடைய பரவசம்.. ராகம் உன்னுடையது.. பல்லவி என்னுடையது.. சரணம் வசனத்தைச் சந்திக்கும் போது, பயணங்கள் இமயமலைக்கு..' இது ஒரு வகையில் என் வாழ்க்கையுடன் தொடர்புடையது.
இளையராஜா அவர்கள் மீதான எனது அன்பைப் பற்றிய பாடலாக இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவரது படங்களுக்குப் பாட வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன், ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் அவரது இசைக்காக ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. இன்று, நான் அவருக்கு அருகில் அமரும்போது, எவரெஸ்ட் சிகரத்தில் அமர்ந்திருப்பது போல் உணர்கிறேன்," என்றார்.