அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

1986ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் 'நானும் ஒரு தொழிலாளி'. இந்த படத்தை ஸ்ரீதர் இயக்கினார். கமல்ஹாசன், அம்பிகா, ஜெய்சங்கர், வி.எல்.ராகவன் உள்பட பலர் நடித்தனர், பின்னாளில் அதிக படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த அம்பிகா கமலுடன் நடித்த முதல் படம்.
இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் 'அந்தரிகண்டே கானுடு' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. தெலுங்கு பதிப்பில் கமல் நடித்த கேரக்டரில் முரளி மோகன் நடித்தார். இந்த படத்திற்கு முதலில் ஸ்ரீதர் 'சக்தி' என்று பெயர் வைத்தார், பின்னர் அந்த பெயரை 'மீண்டும் சூர்யோதயம்' என்று மாற்றினார்.
படம் வெளியாகும் நேரத்தில் அப்போது ஆட்சியில் இருந்தது எம்ஜிஆர். அந்தசமயம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரிய வெற்றி பெற்றிருந்தது. அதனால் இந்த தலைப்பு எம்ஜிஆரின் மனதை புண்படுத்தும் என்று கருதி உள்ளார் ஸ்ரீதர். இதுபற்றி எம்ஜிஆரிடம் ஸ்ரீதர் பேசி உள்ளார். படத்தின் கதையை கேட்ட எம்ஜிஆர் 'இந்த தலைப்பால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் இந்த கதைக்கு, நான் முன்பு நடிப்பதாக இருந்த 'நானும் ஒரு தொழிலாளி' தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று எம்ஜிஆர் கூறியதாகவும், அந்த தலைப்பையே ஸ்ரீதர் இந்த படத்திற்கு வைத்ததாகவும் கூறுவார்கள். தலைப்புக்கு ஏற்ப படமும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளிவந்தது.
தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலதிபரின் மகன் வெளிநாட்டில் படிக்கிறார். தந்தை ஒரு கார் விபத்தில் இறந்ததும் இந்தியா திரும்பும் மகன், தனது அப்பாவை ஏமாற்றி இங்கு இருக்கும் சிலர் கொள்ளை அடிப்பதை அறிந்து கொண்டு தனது சொந்த தொழிற்சாலைக்குள் ஒரு சாதாரண தொழிலாளியாக நுழைந்து எப்படி அவர்களின் தில்லு முல்லுகளை கண்டுபிடிக்கிறார் என்பது மாதிரியான கதை.