டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டனங்களில் தமிழ் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் கருத்து கவனம் ஈர்த்துள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராமில் தான் பஹல்காமில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு எழுதியிருப்பதாவது:
ஒரு காலத்தில் நானும் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றுள்ளேன். பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலையறிந்து மனமுடைந்து விட்டேன். அதேவேளையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு இன்னும் அதிகமான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் காஷ்மீர் மக்களின் நிலையை நினைத்து வருந்துகிறேன்.
நமது நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. இச்சம்பவத்தினை ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் சமூகம் மீதான வெறுப்பாக திசைதிருப்பாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை. நான் அடிக்கடி என் கருத்தைப் பேசுவதில்லை, ஆனால் இதைச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். என்று எழுதியுள்ளார்.
ஆண்ட்ரியாவின் இந்த கருத்தை வரவேற்று பலரும் அதனை பகிர்ந்து வருகிறார்கள்.