ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி |
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்மணி, அரவிந்தராஜ் போன்ற இயக்குனர்கள், பி.சி.ஸ்ரீராம் போன்ற ஒளிப்பதிவாளர்கள் திரைப்படக்கல்லூரியில் இருந்து வந்தவர்கள். ஆனால் அதன்பிறகு அவர்கள் ஆதிக்கம் குறைந்து விட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 'கீனோ' என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தை கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரியில் இயக்குதல் துறையில் படித்து முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற ஆர்.கே. திவாகர் இயக்கி இருக்கிறார்.
படம் குறித்து அவர் கூறும்போது, "இதுவரை நாவல்களிலோ, திரைப்படங்களிலோ சொல்லப்படாத கதை கருவும், கீனோ என்ற கதாபாத்திரமும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாகவும், புதுமையானதாகவும் இருக்கும். படத்தின் தயாரிப்பாளர் கிருத்திகா காந்தியும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகாதாரா பகவத்தும் கல்லூரியில் முதல் மாணவர்களாக திரைப்பட விருது பெற்றவர்கள் ஆவார்கள்", என்றார்.
படத்தில் மாஸ்டர் கந்தர்வா, ரேணுகா சதீஷ், கண்ணதாசன், ராஜேஷ் கோபிஷெட்டி ஆகியோருடன் பல புதுமுக கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள். ஆலிவர் டென்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே.திவாகர் இசை அமைத்துள்ளார்.படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.