விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
பாலிவுட்டின் முன்னணி தொலைக்காட்சி நடிகை தீபிகா கர்கர். சில படங்களிலும் நடித்துள்ளார், இசை ஆல்பங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் தற்போது தனது இரண்டாவது கணவர் சோயப் இப்ராஹிமோடு வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ருஹான் என்ற மகள் இருக்கிறாள்.
தீபிகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் காஷ்மீருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலா சென்றார். அங்கு எடுத்த வீடியோக்கள், படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய இதே இடத்தில் அதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரை தீபிகா தனது குழந்தை, கணவருடன் இருந்துள்ளார். அவர்கள் திட்டமிட்டதற்கு முன்பாகே அந்த இடத்தை விட்டு சென்றதால் தீபிகா குடும்பம் உயிர் தப்பியது.
இதுகுறித்து அவர் கூறும்போது, "சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக தான் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றோம். இந்த சம்பவத்தால் மனம் பதைக்கிறது. இன்னும் நாங்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை" என்றார்.
தொடர்ந்து தீபிகா கக்கர் - சோயப் தம்பதி காஷ்மீர் சுற்றுப்பயணத்தை உடனடியாக முடித்துக்கொண்டு மும்பை திரும்புகிறார்கள். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு நடிகர் - நடிகைகள் உள்பட திரையுலகினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.