டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

சமீபத்தில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் அனைவருமே யார் இந்துக்கள் என பெயரைக் கேட்டு கேட்டு இந்தக் கொலைச் செயலை நிகழ்த்தி இருப்பதால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சில பேர் இந்த நிகழ்வை காரணமாக வைத்து இஸ்லாமிய சமுதாயத்தில் பிரபலமாக இருக்கும் பலரை குறிவைத்து தங்களது கண்டனங்களை மற்றும் அவதூறு தகவல்களை பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஹனுராகவ புடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள 'பவ்ஜி' என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் இமான்வி (இமான்வி இஸ்மாயில்) என்பவரையும் விட்டுவைக்கவில்லை. சோசியல் மீடியாவில் அவர் ஒரு பாகிஸ்தானிய நடிகை என்று கூறியும் அவரை பிரபாஸ் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சிலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலமாக புகழ்பெற்ற இமான்வி நேரடியாக பிரபாஸ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் தன் மீது குத்தப்பட்டுள்ள பாகிஸ்தானி என்கிற முத்திரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் ஒரு இந்திய அமெரிக்க பிரஜை. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்து வளர்ந்தவள். எனக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய உறவினர்கள் யாரும் பாகிஸ்தானிலும் இல்லை. எங்களது குடும்பத்தினர் யாரும் பாகிஸ்தான் ராணுவத்திலும் இல்லை. சிலர் தேவையில்லாமல் என்னை பாகிஸ்தானி என முத்திரை குத்தி வருவது அவர்களின் சுயநலத்தை காட்டுகிறது. இப்படிப்பட்ட ஒரு கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ள நிலைமையில் அனைவரும் ஒன்று சேர்ந்து அதற்காக குரல் கொடுக்க வேண்டுமே, தவிர இதுபோன்று அவதூறான செய்திகளை பரப்பி ஒருவர் மேல் வெறுப்பை உண்டாக்கக் கூடாது” என்று கூறியுள்ளார் நடிகை இமான்வி.