'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக உச்சத்தில் வலம் வந்தார். கடந்த பல வருடங்களாக படங்களில் கதாநாயகனாக மட்டும் நடித்து வருகிறார். இவர் நடிகர் சிலம்பரசன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
தற்போது சந்தானம் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, " ஒருநாள் சிம்பு எனக்கு போன் செய்து, 'படம் ஒண்ணு பண்ணுறேன். அதுல நீங்களும் நடிக்கணும்னு கேட்டார்'. அவர் கேட்டார்னா 'யெஸ்'தான். அதுக்கு மேல ஒண்ணும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இடத்துல அவரை வச்சிருக்கேன். சிம்பு எப்போது கேட்டாலும் 'நோ' சொல்ல மாட்டேன். என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவருக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். எங்கள் அதிரடியையும் அந்தப் படத்தில் எதிர்பாருங்கள்." என தெரிவித்துள்ளார்.
தக் லைப் படத்திற்கு பின் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் தான் சிம்பு உடன் சந்தானம் நடிக்க போகிறார்.