சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

'மான் கராத்தே, கெத்து' ஆகிய படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ரெட்ட தல'. பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தில் சாம்.சி.எஸ் இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் ஒரு அழகான காதல் பாடல். இதன் படப்பிடிப்பை நான்கு நாட்களாக மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலும் தனுஷ் அவர் படங்களை தாண்டி வெளி படங்களுக்கு நெருங்கியவர்களுக்கு மட்டும் பாடலை பாடுவார். தனுஷின் 'இட்லி கடை' படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




