டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் |
நடிகர் சூர்யாவுக்கு நாளை(ஜூலை 23) 50வது பிறந்தநாள். இந்த வயது பலரின் வாழ்நாளில் முக்கியம் என்பதால், சூர்யாவுக்கும் இந்த பிறந்தநாள் முக்கியமான நாளாக அமைகிறது. சினிமா மற்றும் பல அறிவிப்புகள் நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் டீசரை அவரின் பிறந்தநாள் பரிசாக படக்குழு வெளியிடுகிறது. அதில் பல சர்பிரைஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வெங்கி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் பெயரிடப்படாத படத்தில் இருந்து அவரின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட சில விஷயங்கள், அடுத்த புதுப்பட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு.
ஜூலை 27ம் தேதி தனுஷின் 42வது பிறந்தநாள். அன்றைய தினமும் அவர் இயக்கி நடிக்கும் இட்லி கடை பட பர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது தவிர தனுஷ் நடிக்கும் ‛தேரே இஸ்க் மெயின்' ஹிந்தி படத்திலிருந்து போஸ்டர், அவர் நடிக்கும் 54வது பட போஸ்டர் வெளியாக வாய்ப்பு, சில புதுப்பட அறிவிப்புகளும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.