ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை |

2025ம் ஆண்டில் வெளியான சுமார் 140 படங்களில் வசூலைக் குவித்த படங்களாக 'குட் பேட் அக்லி, ட்ராகன், டூரிஸ்ட் பேமிலி, மாமன், மத கஜ ராஜா, குடும்பஸ்தன்,' ஆகிய படங்கள்தான் வசூல் ரீதியாக வெற்றிப் படங்களாக அமைந்தது. இதில் 'குட் பேட் அக்லி' படம் ஆக்ஷன் படமாக அமைந்தது. 'ட்ராகன்' படத்தைக் காதல் படம் என்று சொன்னாலும் குடும்பத்து ரசிகர்களையும் அந்தப் படம் கவர்ந்தது. மற்ற நான்கு படங்களுமே 'பேமிலி டிராமா' படங்களாக வெளியாக வசூலைப் பெற்றது. இதனால், இந்த வருட டிரென்ட் 'பேமிலி' படங்களுக்கு மாறிவிட்டது என்றும் பேசப்பட்டது.
இந்த வாரம் ஜுலை 25ம் தேதியன்று 'தலைவன் தலைவி, மாரீசன்' இரண்டு படங்களுமே குடும்பத்து ரசிகர்களையும் கவரும் அளவிற்கு இருந்தால் அந்த 'பேமிலி டிரென்ட்'டை மீண்டும் நிரூபிக்கும் விதமாக அமைந்துவிடும். 'தலைவன் தலைவி' படம் பக்கா குடும்பத் திரைப்படம் என்பது டிரைலரைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது. 'மாரீசன்' படத்தில் வடிவேலு இருப்பதும், அவருக்கு மறதி நோயான அல்சைமர் நோய் இருப்பதும் குடும்பத்து ரசிகர்களுக்கான ஒரு கதாபாத்திரமாகவே இருக்கிறது.
கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நல்லதொரு வெற்றியைத் தமிழ் சினிமா பார்க்க முடியாமல் தவித்து வருகிறது. தியேட்டர்களுக்கு மீண்டும் குடும்பத்து ரசிகர்களையும் இந்த வாரப் படங்கள் ஈர்த்தாக வேண்டும். இல்லையென்றால் இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய சூழல்தான் உருவாகும்.




