ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் எம்புரான் திரைப்படம் வெளியானது. கடந்த 2019ல் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளியானது முதல் பாகம் எந்தவித சலசலப்பும் இல்லாமல் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் இரண்டாம் பாகம் தேவையில்லாமல் சில காட்சிகளில் இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தி விட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டன.
அது மட்டுமல்ல ஆளும் மத்திய பாஜக அரசில் அமைச்சராக பொறுப்பு வைக்கும் நடிகர் சுரேஷ் கோபியின் பெயர் இந்த படத்தின் டைட்டில் நன்றி கார்டில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த சர்ச்சைக்குப் பிறகு சுரேஷ்கோபி கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் பெயர் நீக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜ்யசபா விவாதத்தின் போது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரிட்டோ என்கிற எம்பி எம்புரான் படத்தில் மத்திய அரசின் அழுத்தம் காரணமாகத்தான் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினார்.
அதற்கு பதிலளித்த சுரேஷ்கோபி, “எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. அவர்களாகவே தான் தேவையற்ற காட்சிகள் என சிலவற்றை நீக்கி விட்டார்கள். என் பெயரைக் கூட நான் கேட்டுக் கொண்டதால் தான் நீக்கினார்கள். இப்போது குற்றம் சாட்டும் இது கம்யூனிஸ்ட் கட்சியினர் பத்து வருடத்திற்கு முன்பு லெப்ட் ரைட் லெப்ட் என மலையாளத்தில் வெளியான படத்தை, கம்யூனிஸ்ட் தலைவர்களை மோசமாக சித்தரித்ததாக கூறி அந்த படத்தை ஓட விடாமல் தடுத்து அடாவடி செய்ததை மறந்து விட்டீர்களா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
அப்படி கம்யூனிச தலைவர்களை விமர்சித்து அந்த லெப்ட் ரைட் லெப்ட் படத்தின் கதையை எழுதியதும் இந்த எம்புரான் படத்தில் கதையை எழுதியதும் முரளி கோபி என்கிற ஒரே கதாசிரியர் தான் என்பது ஆச்சரியமான விஷயம்.