மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் |
கடந்த வாரம் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ‛லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக ‛எம்புரான்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்தார். கதையை நடிகர் முரளி கோபி எழுதியிருந்தார். ஆனால் படம் வெளியான முதல் நாளில் இருந்தே அதில் இடம்பெற்றிருந்த மதம் சம்பந்தமான சில காட்சிகளுக்காக சர்ச்சையில் சிக்கியது. இது டில்லி வரை எதிரொலித்தது. இதைத் தொடர்ந்து அந்த படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டன.
அந்த சமயத்தில் தொடர்ந்து ராணுவ படங்களாக இயக்கி வந்த இயக்குனர் மேஜர் ரவி இது குறித்து கூறும் போது, “மோகன்லால் எப்போதும் இது போன்ற சர்ச்சைகளில் சிக்க விரும்ப மாட்டார். அவரைப் பொறுத்தவரை கதை கேட்பதுடன் சரி. அவரது காட்சிகளுக்காக டப்பிங் பேசுவதோடு சரி.. மற்றபடி எடிட்டிங் முடிந்த முழு படத்தையும் ரிலீசுக்கு முன்பாக அவர் பார்ப்பது இல்லை. அப்படி அவர் பார்த்திருந்தால் இது போன்ற காட்சிகளை நிச்சயம் இடம் பெற அனுமதித்து இருக்க மாட்டார்” என்று கூறினார்.
இவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கூறும்போது, “மோகன்லால் முழு கதையையும் கேட்டு விட்டு தான் இந்த படத்தை ஒப்புக்கொண்டு நடித்தார்” என்று கூறியுள்ளார். அதேபோல பிரித்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாரன் கூறும்போது, “மேஜர் ரவி தேவை இல்லாமல் எம்புரான் படத்தை மோசமான படம் என விமர்சித்து இருக்கிறார்” என்று தன் பங்கிற்கு மேஜர் ரவியை குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் தற்போது மேஜர் ரவி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “என் மீது சம்பந்தமே இல்லாமல் இரண்டு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை மோசமான படம் என்று எங்கேயும் சொல்லவே இல்லை. சொல்லப்போனால் முதல் நாள் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த போது டெக்னிக்கலாக இந்த படம் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது என்று பாராட்டவே செய்தேன். அதே சமயம் படம் பார்க்கும்போது படத்தில் மதம் சம்பந்தப்பட்டு சொல்லப்பட்ட காட்சிகள் எனக்கு உறுத்தலாக இருந்தாலும் கூட அதை நான் வெளியே சொல்லி சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை. ஆனால் அடுத்து வந்த நாட்களில் பலரும் இது பற்றி பேசத் துவங்கிய பின்னர்தான் நான் என்னுடைய கருத்தை வெளியிட்டேன். அப்போது கூட படம் மோசம் என்று எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை. எதற்காக மல்லிகா சேச்சி இப்படி கூறியுள்ளார் என்று தெரியவில்லை.
அதேபோல மோகன்லால் ரிலீஸுக்கு முன்னதாக மோகன்லால் இந்த படத்தை பார்க்கவில்லை என்று நான் சொன்னேன். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மோகன்லால் முழு கதையை கேட்டுதான் நடித்தார் என்று மட்டும் தான் கூறியிருக்கிறார். நானும் ஒரு கதாசிரியர் தான்.. படத்தின் கதையை கூறும் போது ஒன்றாக இருக்கும்.. படப்பிடிப்பு நாட்களில் அதில் பல மாற்றங்கள் நடக்கும்.. அதனால் தான் அவையெல்லாம், குறிப்பாக மோகன்லால் சம்பந்தப்படாத காட்சிகள் பற்றி, அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி மோகன்லாலுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்கிற வாய்ப்பு இல்லை.
அவர் ரிலீஸுக்கு முன் படத்தை பார்க்கும் வழக்கம் இல்லாதவர் என்பதால் அவர் கவனத்திற்கு வராமலேயே இது போய்விட்டது.. பார்த்திருந்தால் இதை தடுத்திருப்பார் என்கிற எண்ணத்தில் தான் நான் கூறினேன், இப்போது வரை மோகன்லால் ரிலீசுக்கு முன் எம்புரான் படம் பார்த்தார் என்கிற வார்த்தை தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரிடம் இருந்து வரவில்லையே” என்று விரிவான பதிலடி கொடுத்துள்ளார் மேஜர் ரவி.