மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் |
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது அவரது நடிப்பில் ஏற்கனவே 2009ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆர்யா 2 திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தையும் இயக்குனர் சுகுமார் தான் இயக்கியிருந்தார். புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது ரசிகர்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பு இருந்ததோ அதேபோல இந்த ஆர்யா 2 திரைப்படத்திற்கும் பல திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் முந்தி அடித்ததுடன் நேற்று சனிகிழமை பல காட்சிகள் ஹவுஸ்புல்லாக நிரம்பின.
அதேசமயம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா என்கிற திரையரங்கில் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான துயர சம்பவம் நிகழ்ந்தது. பலியான அந்தப் பெண்ணின் மகன் காயம் பட்டு தற்போது மூளை சாவு அடைந்த நிலையில் இருக்கிறார். இந்த சமயத்தில் தியேட்டரில் அல்லு அர்ஜுன் திடீரென படம் பார்க்க வந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தான் இந்த நிகழ்வு நடந்ததாக சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல அந்த சமயத்தில் போதிய அளவு தியேட்டரில் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை.
அந்த சம்பவத்தின் எதிரொலியாக தற்போது ஆர்யா 2 வெளியான பல திரையரங்குகளில் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்தி எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் அவர்கள் கண்கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டனர். இதனால் ஆர்யா 2 திரையிடப்பட்ட எந்த திரையரங்குகளிலும் பிரச்னைகள் ஏதும் இன்றி படம் திரையிடப்பட்டது.