பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் | 50 கோடிக்கு பேரம் பேசும் சிவகார்த்திகேயனின் பராசக்தி | ஓடிடி டீலிங் முடிந்த இட்லி கடை : என்ன விலை தெரியுமா? | 23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ |
கடந்த வருடம் மலையாளத்தில் சின்ன பட்ஜெட் படமாக கிட்டத்தட்ட புது முகங்கள் என்கிற அளவில் வெளியான ‛பிரேமலு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மமீதா பைஜூ, விஜய் மற்றும் சூர்யா படங்களில் அடுத்தடுத்து இணைந்து நடிக்கும் அளவிற்கு பிரபலமானார். அதேபோல படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நஸ்லேன் மற்றும் அவரது நண்பராக நடித்த சங்கீத் பிரதாப் ஆகியோருக்கும் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகின்றன.
அப்படி நஸ்லேன் கதாநாயகனாக நடித்துள்ள அவரது இரண்டாவது படம் ‛ஆலப்புழா ஜிம்கானா' வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. மம்முட்டி நடிப்பில் வெளியான போலீஸ் ஆக்சன் படமான ‛உண்ட' மற்றும் டொவினோ தாமஸ் நடிப்பில் அடிதடி சண்டை காட்சிகளுடன் வெளியான ‛தள்ளுமால' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் காலித் ரஹ்மான் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். கல்லூரியில் சேர விரும்பும் இளைஞர்களின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கதாநாயகன் நஸ்லேன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட பிரபலமான கல்லூரியில் சேர விரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு அங்கே இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக அந்த கல்லூரியில் சேர நினைக்கும் அவர்கள் இதற்காக பாக்ஸிங் கற்றுக் கொள்ள செல்கிறார்கள். அவர்கள் பாக்சிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னால் நடக்கும் சம்பவங்கள், அதன் பிறகு அவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததா என்பதை எல்லாம் மையப்படுத்தி இந்த படம் காமெடி கலந்து உருவாகியுள்ளதாம்.