பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகன் என்று போற்றப்பட்டவர் மோகன். அவர் நடித்த படங்கள் எல்லாம் வெள்ளி விழா கொண்டாடியது. அவற்றில் பெரும்பாலான படங்கள் கே.ரங்கராஜ் இயக்கியது. இளையராஜா இசை அமைத்தது.
பாரதிராஜாவிடம், 'புதிய வார்ப்புகள்' படத்தில் இருந்து, 'அலைகள் ஓய்வதில்லை' வரை ஐந்து படங்களுக்கு மேல் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கே.ரங்கராஜ் பிறகு, 'நெஞ்சமெல்லாம் நீயே' படத்தின் மூலம் இயக்குநரானார்.
1983ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வெளியானது 'நெஞ்சமெல்லாம் நீயே'. மோகன், ராதா, பூர்ணிமா பாக்யராஜ், கவுண்டமணி முதலானோர் நடித்த இந்தப் படம், பாடல்களுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி, 42 வருடங்களாகிவிட்டன.
பாரதிராஜாவும், அவரிடம் உதவியாளராக இருந்தவர்களும் இளையராஜா இசையை தேடி ஓடியதை போன்றே இவரும் போனார். ஆனால் இளையராஜா கேட்ட சம்பளம் படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதியாக இருந்தது. அதனால் சங்கர் கணேஷ் இசை அமைத்தனர். 'யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது...' என்ற பாடல் இந்த படத்தில்தான் இடம்பெற்றது. ஒரு புகழ்பெற்ற பாடகிக்கும் தாழ்வு மனப்பான்மை கொண்ட அவரது கணவருக்கும் இடையிலான ஈகோதான் படத்தின் கதை.
இந்த படத்தில் மனைவி பாடகியாக இருப்பதை பார்த்து பொறாமைப்பட்ட மோகன் அடுத்த படமான 'உதயகீதம்' படத்தில் பாடகராகவே நடித்தார். அந்த படத்தில் மைக்கை தொட்டவர் தொடர்ச்சியாக பாடகராகவே நடித்து 'மைக் மோகன்' என்ற பட்டத்தையும் பெற்றார்.
ஆக மோகன் கையில் மைக்கை கொடுத்து வெள்ளி விழா நாயகன் ஆக்கியது கே.ரங்கராஜ். பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் கே.ரங்கராஜ் 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் புரமோசன்களுக்கு மோகனை அழைத்தபோது வரவில்லையாம். குறைந்தபட்சம் படத்திற்கு வாழ்த்துகூட சொல்லவில்லையாம்.
தான் 'மைக் மோகன்' என்று அழைக்கப்படுவதை சிறிதும் விரும்பாதவராகவே இருந்தார் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.