படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக நடித்த குஷி படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காத சமந்தா, விரைவில் பங்காராம் என்ற படத்தை தயாரித்து கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். அதோடு ஏற்கனவே சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்தவர் மீண்டும் டிகே - ராஜ் இயக்கும் ஒரு வெப் தொடரிலும் நடிக்கிறார். தனது உடல் கட்டை பராமரிப்பதில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வரும் சமந்தா, ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்து வருகிறார். அது குறித்த வீடியோக்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில் தற்போது 110 கிலோ எடையை தூக்கி உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சமந்தா. அதோடு, “Go big or go home” என்று குறிப்பிட்டுள்ளார்.