உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள டிராகன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் 7 நாட்களில் 80 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனராக கோமாளி படம் வெற்றி, நடிகராக லவ் டுடே, டிராகன் படங்களின் வெற்றி என தொடர் வெற்றியை தந்துள்ளார் பிரதீப். இதனால் அவரின் அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளத.
டிராகன் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (சுருக்கமாக LIK) படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் டிராகன் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள். இது குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது. மேலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க, எஸ்.கே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார்.