இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கவர்ச்சி, அடிதடி, இரட்டை அர்த்த வசனங்கள் என்று தடம் மாறி சென்று கொண்டிருந்த சினிமா உலகில், குடும்ப உறவுகளின் மேண்மையை எடுத்துரைத்து, பாசப்பிணைப்பினை பக்குவமாய் பார்வையாளர்கள் மனங்களில் பதிய வைக்கும் பண்பட்ட திரைக்கதை வடிவத்தை தருபவர்தான் இயக்குநர் ஏ பீம்சிங். இவரது திரைப்படம் என்றால் பயமின்றி அனைவரும் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் நிலையை உருவாக்கியிருந்தார். ஆடம்பரமற்ற, அமைதியான சுபாவம் கொண்ட இவரது இயக்கத்தில், ஏ வி எம் தயாரித்த திரைப்படம்தான் “பாவமன்னிப்பு”. சிவாஜி, ஜெமினிகணேசன், சாவித்திரி, தேவிகா, எம் ஆர் ராதா, எம் வி ராஜம்மா, எஸ் வி சுப்பையா, டி எஸ் பாலையா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடித்திருந்த இத்திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்க, பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
படத்தில் ஜெமினிகணேசன் தன் காதலியை நினைத்துப் பாடுவது போல் வரும் ஒரு பாடல் காட்சி. குறிப்பிட்ட அந்தப் பாடலை பி பி ஸ்ரீநிவாஸ் பாடினால் நன்றாக அமைந்துவிடும் என்று இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் கருதினார். ஜெமினி கணேசனுக்கு பொருத்தமான பின்னணிப் பாடகர் ஏ எம் ராஜாதான் என்ற கருத்து வலுவாக இருந்த காலம் அது. இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளரான ஏ வி மெய்யப்ப செட்டியாரிடம் இயக்குநர் ஏ பீம்சிங்கும், இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனும் சென்று பி பி ஸ்ரீநிவாஸை பாட வைக்க அனுமதி கேட்டனர்.
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பி பி ஸ்ரீநிவாஸை பாட வையுங்கள் என மெய்யப்ப செட்டியாரும் அனுமதி தர, கவியரசரின் வரிகளுக்கு மெல்லிசை மன்னர்களின் இசைவார்ப்பில் பி பி ஸ்ரீநிவாஸ் குரலில் பிறந்தது “காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்” என்ற காலத்தால் அழியா அந்தக் காவியக் காதல் பாடல். பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களின் திரையிசைப் பயணத்தில் வசந்தம் வீச காரணமாகவும் அமைந்தது இந்தப் பாடல். இதன் பின்னர் 'காதல் மன்னன்' ஜெமினி கணேசனுக்கு நூற்றுக் கணக்கான பாடல்களைப் பாடி அவரது குரலாகவே வாழ்ந்தும் வந்தார் பி பி ஸ்ரீநிவாஸ்.