மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
ஹிந்தித் திரையுலகின் மூத்த பாடகர் உதித் நாராயண். ஹிந்தி தவிர தமிழில் கூட பாடல்களைப் பாடியிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு நடந்த இசை நிகழ்ச்சியில், பெண் ரசிகை ஒருவருக்கு உதட்டின் மீது முத்தம் கொடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். மேடையில் உதித்துடன் செல்பி எடுக்க வந்த அந்த ரசிகையின் தலையை சாய்த்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.
அதற்கடுத்து வேறொரு பெண் ஒருவரும் அது போல செல்பி எடுக்க வந்த போது அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்த பின் உதட்டிலும் முத்தம் கொடுத்துள்ளார் உதித் நாராயண். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. ரசிகர்கள் பலரும் உதித் நாராயண் செயலை கண்டித்துள்ளனர்.
இதற்கு முன்பு பாடகிகள் ஷ்ரேயா கோஷல், அல்கா யாக்னின் ஆகியோருக்கு உதித் முத்தம் கொடுத்த புகைப்படங்களையும் சில ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.
தற்போது முத்த சர்ச்சை குறித்து உதித் நாராயண் மன்னிப்பு கேட்பாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.