ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட மலையாள நடிகர் பிரித்விராஜ் கடந்த 2019ல் முதல்முறையாக டைரக்ஷனில் இறங்கி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அரசியல் பின்னணியுடன் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மலையாளத்தில் முதல் 200 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையை பெற்றது. அதன் பிறகு பிரித்விராஜ் ஒரு பக்கம் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் டைரக்ஷனிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தபடி மோகன்லாலை வைத்து தற்போது எம்புரான் படத்தை இயக்கி முடித்து விட்டார். வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில் சலார் படத்தில் பிரித்விராஜூடன் இணைந்து நடித்த நடிகர் பிரபாஸ் எம்புரான் டீசருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எம்புரான் டீசரை பார்த்தேன். உண்மையிலேயே உலகத்தரத்தில் இருக்கிறது. பிரமிப்பாக படமாக்கப்பட்டுள்ளது. ஒன் அண்ட் ஒன்லி மோகன்லால் சார் நடிப்பில், என்னுடைய சொந்த வரதாவின் இயக்கத்தில்.. (பிரித்விராஜ் சலார் படத்தில் வரதராஜ மன்னர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்). மொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.