என் சினிமா வாழ்க்கையில் இதுவே முதல் முறை - மீனாட்சி சவுத்ரி | தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட மனிதர் அஜித் - நடன இயக்குனர் கல்யாண் | யுவன் சங்கர் ராஜாவை புகழும் சிவகார்த்திகேயன் | மீண்டும் வீர தீர சூரன் படத்திற்கு சிக்கலாக நிற்கும் விடாமுயற்சி | பொங்கல் வெளியீட்டில் பின் வாங்கிய படங்கள் | சினிமா காதலி : சந்தோஷத்தில் சபிதா | மார்கோ 2வில் வில்லனாக விக்ரம்? | காதலர் தினத்தில் வெளியாகும் மம்முட்டியின் ஆக்ஷன் படம் | ஷங்கர் படங்களை 'பிளாக்'கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன் - பவன் கல்யாண் | ஆசைமுகம், வாலி, லவ் டுடே : ஞாயிறு திரைப்படங்கள் |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்ற படங்கள் பட்டியலில் மஞ்சும்மேல் பாய்ஸ் மற்றும் ஆவேசம் ஆகிய படங்களுக்கு மிக முக்கிய இடங்கள் உண்டு. இதில் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை சிதம்பரம் இயக்கியிருந்தார். கேரளாவில் இருந்து ஒரு நண்பர்கள் குழு கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள குணா குகையில் நண்பர் ஒருவர் தவறி விழுந்து விட அவரை சக நண்பர்கள் போராடி காப்பாற்றுவது தான் படத்தின் கதை. உணர்ச்சிபூர்வமாக இந்த படத்தை கொடுத்து மலையாளம் தாண்டி தமிழ் ரசிகர்களையும் வசியப்படுத்தி இருந்தார் இயக்குனர் சிதம்பரம்.
அதேப்போல காமெடி தாதா வகை கதையில் ஆவேசம் திரைப்படத்தை வித்தியாசமான பாணியில் உருவாக்கி இருந்தார் இயக்குனர் ஜித்து மாதவன். குறிப்பாக நடிகர் பஹத் பாசிலை வித்தியாசமான தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பில் வெளிகாட்டி இருந்தார். இந்த படமும் 100 கோடி வசூலித்தது. இந்த படத்தின் வெற்றி காரணமாக அடுத்து அவர் மோகன்லாலை வைத்து படம் இயக்கப் போகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது கன்னடத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்கிற படத்தை தயாரித்து வரும் நிறுவனம் தாங்கள் புதிதாக தயாரிக்கும் படத்தில் ஜித்து மாதவன் மற்றும் சிதம்பரம் இருவரும் இணைந்துள்ளார்கள் என்கிற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை இரண்டு இயக்குனர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். அனேகமாக இந்த படத்திற்கு ஜித்து மாதவன் கதை எழுதுவார் என்றும் சிதம்பரம் இந்த படத்தை இயக்குவார் என்றும் தெரிகிறது.