அட்லி படத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மற்றும் கொரியன் நடிகர்! | ஹரி ஹர வீரமல்லு படத்துக்காக பின்னணி பாடிய பவன் கல்யாண் | ஆந்திராவில் கேம் சேஞ்சர், டக்கு மகாராஜ், வஸ்துனம் படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி | ‛7ஜி ரெயின்போ காலனி 2' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது | மனைவிக்காக மாரி செல்வராஜ் எடுத்த முடிவு | துபாயில் மாதவன், நயன்தாரா குடும்பத்தினர் புத்தாண்டு கொண்டாட்டம் | விலகிய ‛விடாமுயற்சி' : பொங்கல் வெளியீட்டில் திடீர் புதுவரவுகள் | கிருஷ்ணராக நிச்சயம் மகேஷ்பாபு தான் நடிப்பார் : கல்கி இயக்குனர் தகவல் | நான் வெட்கமில்லாதவன் தான் : இசையமைப்பாளர் கோபிசுந்தர் ஓபன் டாக் | புத்தாண்டு கொண்டாட்டம் : சிங்கப்பூரில் குடும்பத்துடன் முகாமிட்ட அஜித் |
மலையாள திரையுலகில் இந்த வருடம் வெளியான பல படங்கள் 50 கோடி முதல் 200 கோடி என்கிற மிகப்பெரிய வசூல் இலக்கை கூட தொட்டு ஆச்சரியப்படுத்தின. இத்தனைக்கும் பெரிய நடிகர்களின் படங்கள் ஒரு சில தான் இந்த சாதனையை தொட்டன. ஆனால் சிறிய பட்ஜெட்டில் உருவான பல படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் மழையில் நனைந்தன. ஆனால் அப்படி வசூலை அள்ளிய பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ் உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரசிகர்களின் உணர்வுகளை மென்மையாக வருடி வெற்றி பெற்ற படங்களாக தான் இருந்தன. அதேசமயம் இந்த வருட இறுதியில் கடந்த வாரம் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படம் ஐந்தே நாளில் உலக அளவில் 50 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இத்தனைக்கும் இந்த படம் அதிகபட்ச வன்முறை காட்சிகளுடன் வெளியாகி உள்ளது. பெண்கள் மற்றும் குடும்பமாக வந்து பார்க்கும் கூட்டம் குறைவு என்றாலும் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளும் படத்தின் விறுவிறுப்பும் இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது. மேலும் தற்போது மோகன்லால் இயக்கி நடித்துள்ள பரோஸ் திரைப்படம் வெளியாகியும் கூட மார்கோ படத்திற்கு குறைவில்லாத கூட்டம் வந்து கொண்டிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து ஆச்சரியமாக சொல்லப்படுகிறது.