தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

நடிகை சிம்ரன் 2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது கடந்த சில வருடங்களாக தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த வருடத்தில் தமிழில் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் சிம்ரனின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில் சிம்ரன் இப்போது யூடியூப் சேனலில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "இவ்வருடத்தில் டூரிஸ்ட் பேமிலி, டிராகன் மற்றும் 3 பிஎச்கே ஆகிய படங்கள் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படங்கள் வெளியாகி ஒரு வாரங்கள் கழித்து திரையரங்குகளுக்கு சென்றாலும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் உள்ளது. ஆனால், மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு சமூக வலைதளங்களில் பல கோடி வசூல் என்கிறார்கள். ஆனால், திரையரங்குகளுக்கு ஒரு வாரம் கழித்து சென்றால் மக்கள் கூட்டம் இல்லை. ஆனால், வசூலில் இவ்வளவு மிகைப்படுத்துகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியம்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதில் சிம்ரன் எந்த பெரிய நடிகரின் படத்தை குறிப்பிடுகிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.